சுமார் 20 இலட்சம் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான பீ.சீ.ஆர் முடிவுகளையே பெற்றுக் கொள்வதற்கான வசதியே காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா நிதியத்திலுள்ள நிதியில் குறைந்தளவான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், ஏனைய நிதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கொழும்பு - நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன் பின்னர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாணக்கியன், கிழக்கு மாகாணத்தின் எந்த மாவட்டத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் 10 நாட்களுக்கு பிறகே தெரியவரும் அவல நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.