சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் நேற்றய தினம் வெளியிட்ட சுகாதார அறிக்கைப்படி 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டோர்க்கான COVID தடுப்பு ஊசிகளில் 9 மில்லியன் சினபோம்(sinopharm) தடுப்பு ஊசிகள் மற்றும் 14 மில்லியன் பைசர்(pfizer) தடுப்பு ஊசிகளும் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக கபினட் அமைச்சரவை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கையின் 21 மில்லியன் சனத்தொகையில் 3.5 மில்லியன பேர் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைபட்டோர் என புள்ளிவிபரம் கூறுகின்றது. இந்நிலையில் இக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 30 சதவீதமானோர் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டோர் என வைத்தியர் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த வளர்ந்து வரும் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க கட்டாயம் இன்னும் சில வாரங்களில் தடுப்பு ஊசிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரபுக்வெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.