கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவிவரும் இந்நிலையில் இரண்டு வாரங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்காவது நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முடக்கப்பட அதிக சாத்தியங்கள் உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.