கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் நாளை முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை சதோச ஊடாக விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
1998 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குவோருக்கு இவ் நிவாரணப் பொதி வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.