இலங்கையை மெருகூட்டும் வகையில் களனி பாலத்தின் புதிய புகைப்படம் இன்று வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2014ம் ஆண்டு சட்டரீதியான திட்டம் தயாரிக்கப்பட்டு இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் இப்பாலத்தின் நிர்மாண பணிகள் தற்பொழுது 98.5 சதவீதம் முடிவடைந்துள்ளது என இன்று இடம்பெற்ற களனி பால மீளாய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். குறித்த பாலம் பார்பவரை கவரும் வகையில் இருப்பது புகைப்படம் வைரலாக முக்கிய காரணமாகும்.