நாட்டில் 11 நாட்களுக்கு போதுமான டீசலும் 10 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே இருப்பில் காணப்படுகின்றது.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக கனியவள தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.