இன்று இரவு பத்து மணி முதல் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அமுலாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த முடக்கமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சற்று முன் சுகாதார அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சட்டத்தை கடைப்பிடிக்குமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்