வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நேற்று ஆரம்பமாகிய நிலையில், இன்று காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.
யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருப்பலியுடன், சிறப்புத் திருப்பலி பூஜைகள் தமிழ், சிங்கள மொழிகளில் இடம்பெறுகின்றன.
திருப்பலி பூஜைகளின் பின்னர் தேர் பவனியும், அதனை தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்று திருவிழா, இன்றே நிறைவடையவுள்ளது.
இம்முறையும் இலங்கை, இந்திய நாடுகளிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், விழாவில் பங்கேற்றுள்ளனர்.