இம்முறை தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவு மாவட்ட செயலகங்கள் ஊடக வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
கடந்த ஊரடங்கில் இத்தொகை ஐயாயிரம் ரூபாவாக காணப்பட்டது. இன்று அத்தொகை இரண்டாயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நம் நாடு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுத்த நம் அரசாங்கத்திற்க்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இந்த இரண்டாயிரம் ரூபாவால் என்ன பொருள் வாங்க முடியும் என்ற கேள்வி நம் மத்தியில் எழுகிறது. காரணம், நம் நாட்டில் காணப்படும் பொருட்கள் விலையுயர்வே ஆகும். இந்நிலை வருந்த கூடிய ஒன்றாகும்...