கென்யாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
இன்று காலை 7.55 மணியளவில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின் பேரில் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன், கென்ய வாழ் இலங்கை மக்களை நைரோபி நகரில் சந்தித்து ஜனாதிபதி, கலந்துரையாடினார்.