இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கல் இந்த மாத இறுதியில் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீலக்கல் தொடர்பில் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்காக அதனை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதாக அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நீல மாணிக்கக்கல் கொத்தணியாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் நிறை 500 கிலோக கிராமை விடவும் அதிகம் என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.