செல்லப்பிராணிகளை பூச்சு மற்றும் புழுக்கடியில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படும் இலங்கையில் தயாரிக்கப்படும் மருந்தினால் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக கால்நடை வைத்திய பீட பேராசிரியர் அசோக்க தங்கல்ல இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பரிசோதனை ஆய்வு நடத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு இந்த மருந்தினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
1975ம் ஆண்டு தொடக்கம் பயன்பாட்டில் இருக்கும் இந்த மருந்தினை மனிதர்களுக்க ஏற்படும் வைரஸ் குணப்படுத்த அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஆபிரிக்க நாடுகள் பயன்படுத்தி வருவதாக பேராசிரியர் அசோக்க தங்கல்ல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் சில வைத்தியர்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு இந்த மருந்தினை கொடுத்து அதில் பயன்பெற்றுள்ளதுடன் இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையிலும் சில வைத்தியர்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு இந்த மருந்தினை கொடுத்து அதில் பயன்பெற்றுள்ளதுடன் இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
கொரோனா தொற்று ஏற்படும் நபர் நாள் ஒன்றுக்கு மூன்று மாத்திரை வீதம் உட்கொண்டால் தொற்று குணமாகும் எனவும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் பேராசிரியர் அசோக்க தங்கல்ல தெரிவித்துள்ளார்.