அரசாங்கம் வழங்கும் 2000 ரூபாய் நிவாரண பணம் கிடைக்காதவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் தமக்கு நிவாரண பணம் கிடைக்காமை தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும். இந்த விடயத்தை பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானத்தை இழந்துள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் அரசாங்கத்தின் வேறு எந்த உதவி பணத்தையும் பெறாதவர்களுக்கு தற்போது 2000 ரூபாய் நிவாரணப் பணம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.