முப்படையினர் மற்றும் பொலிசாரின் தனியார் காணிகளின் பாவனைக்காக இதுவரை மீள குடியமர்த்தப்படாத குடும்பங்களின் விபரங்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
காணி உரிமையாளர்கள் தற்போதும் யாழில் வசிப்பவர்களாயின் அது தொடர்பாக விண்ணப்பங்களை பூர்த்திசெய்து தங்களின் காணி உறுதியின் பிரதிகளுடன் கிராமசேவகரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்திடம் கையளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.