யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 22 வயது இளம் பெண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்இ நெல்லியடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறு யாழில் உயிரிழப்பு வீதம் அதிகரித்து செல்கின்றது.