இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தரவிலிருந்து காணாமல் போயிருந்த நோயாளிகளின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீள இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையில் 24 மற்றும் 27ம் திகதிகளில் 5,350 பேரின் தகவல்கள் காணாமல் போயிருந்தன.
இவர்கள் பற்றிய விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தரவில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 431,519 ஆக உயர்வடைந்துள்ளது.