web log free
July 01, 2025

சந்தேகத்துக்கிடமான சடலம் மீட்பு

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கு இடமான முறையில் இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என, தெரிவித்துள்ள பொலிஸார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன். மரண விசாரணைகள் இன்றைய தினம் (18) முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd