சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குனவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனை குறிப்பிடடார்.
அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை ஆசிரியர் சங்கம் நிராகரித்துள்ளதா என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர பதிலளிக்கையில் , இந்த கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சுற்றறிக்கை முதலானவை இன்னும் வெளிவரவில்லை. அவை வெளிவந்த பின்னர் ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.
24 வருடங்களாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழி வகுக்கும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
#srilanka #DineshGunawardena