web log free
January 11, 2025

அரசின் திட்டமிடப்படாத செயற்பாடுகளால் ஏற்படவுள்ள பற்றாக்குறை

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாடுகளால் பாரிய உணவுப்பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக எதிர்க்கட்சி அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற ஊகடவியலாளர் சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், உலகசந்தையில் சீனியின் விலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கையில் அனைத்து செலவுகளையும் சேர்த்ததன் பின்னர் ஒரு கிலோகிராம் சீனியை 98 ரூபாவிற்கு சந்தைக்கு வழங்கமுடியும். 

ஆனால் அரசாங்கத்தினால் அதற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய முறைகேடான வாய்ப்புக்கள் மற்றும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் பாரிய சீனிமோசடி ஆகியவற்றின் காரணமாகவே தற்போது ஒருகிலோகிராம் சீனியின் விலை 220 ஆக அதிகரித்துள்ளது .  அதுமாத்திரமன்றி உரியவாறான திட்டமிடல்கள் அற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பயிர்ச்செய்கையும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

எனவே எதிர்வரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நாடு மிகமோசமான உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என அவர் எச்சரித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd