மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவரை மற்றும் குளிரூட்டி பெட்டி என்பவற்றில் சவப்பெட்டிகள் நிறைந்து கானப்படுவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளளார்.
கடந்த சில வாராங்களாக கொரோனாவின் தாக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் மரண வீதமும் அதிகரித்தே செல்கின்றது என்பதை இவ்வாறு தேங்கியிருக்கும் சவப்பெட்டிகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.
ஆகவே மக்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்களே பாதுகாக்க வேண்டிய அவசியத்திற்கு தற்ப்போது நிலை மாறியுள்ளது . எனவே வீணாக வெளியில் சென்று தொற்றுக்குாகாமல் சுகாதார நடமுறையை பேணுவது மிகமிக முக்கியம் என்பதை இந்த வைத்தியசாலை பிணவறையில் தேங்கியிருக்கும் சவப்பெட்டிகளின் புகைப்படம் உணர்த்துகின்றது.