தென்னாப்பிரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் கோவிட் -19 தொற்றின் சி .1.2 என அடையாளம் காணப்பட்ட மாறுபாடு சில முந்தைய விகாரங்களால் உருவானது என்று சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்படாத தற்போதைய மாறுபாடு, சீனா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, போர்ச்சுகல், காங்கோ மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.