கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீடிக்கலாமா, என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைய தினம் கொவிட் செயலணி யின் வழக்கமான சந்திப்பு ஜனாதிபதி தலைமையில், நடைபெறும். இதன்போதே ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.