முதலொருப்பொழுதும் இல்லாதவாறு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மக்களால் ஈடுகட்ட முடியாத அளவு அதிகரித்து வருகின்றன.
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்ட்ட ப்படும் நிலையில் இந்த விலை அதிகரிப்பு மக்களை அதீத துன்பத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே சீனி, பருப்பு, சிமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் பால்மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 12 ரூபாவினால் பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.