முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சிங்கள நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 12ம் திகதி 4 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பாரதூரமாக எந்த குற்றங்களையும் செய்யாத நிலையில் அவரைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அவரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.