ஒலிம்பிக் ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெறுமைச் சேர்த்த பிரபல வீராங்கனை சுசன்திகா ஜெயசிங்கவிற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் அவரின் பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் ஒலிம்பிக் ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இலங்கையின் ஓய்வு பெற்ற ஸ்ப்ரிண்டர் ஆவார். உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற முதல் ஆசிய பெண்மணியும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே ஆசிய விளையாட்டு வீராங்கனையும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இலங்கையரும் இவராவார்.
மாத கூலி பெற்று வாழ்க்கை நடத்தும் வரிய குடும்பத்தில் பிறந்த சுசன்திகா 16 வயதில் ராணுவ அதிகாரி ஒருவரால் தடகளப் போட்டிகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டார். திறமைசாலி என்றாவது ஒரு நாள் வாய்பை எட்டி பிடிப்பான் என்பதை போல அவரின் தடகள வாழ்க்கையைத் தொடர இலங்கை இராணுவ தன்னார்வப் படையில் சேர வாய்ப்பு கிட்டியது. வாய்ப்பை சரிவர பயன்படுத்திய அவர் தனது 18 வயதில் ஜகார்த்தாவில் நடைபெற்ற 1994 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது 200 மீ ஓட்டப்போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 100 மீ போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும்ப் பெற்றார்.
2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் அவருக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கம் 21 வருடங்களுக்கு தடகள போட்டியில் தெற்காசியாவிற்கான ஒரே ஒலிம்பிக் பதக்கமாக இருந்தது. 1996, 2000 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை ஒலிம்பிக்கில் இலங்கையை நிலைநிறுத்தியுள்ளார்.
ஆசிய பிளாக் மேர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் இலங்கையில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவும் கருதப்படுகிறார்.