web log free
January 12, 2025

EPL 2021ல் பங்கேற்கும் 7 இலங்கை வீரர்கள்

இலங்கையை பெருமிதப்படுத்தும் விதத்தில் 2021 நேபாளத்தில் நடைப்பெறவிருக்கும் எவரெஸ்ட் பிரீமியர் லீக் 2021 கிரிகெட் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 25ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி வரை நடைப்பெறவுள்ள நிலையில் இலங்கையைச் சேர்ந்த 7 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

உபுல் தரங்க, தம்மிக்க பிரசாந்த், சீகுகே பிரசன்ன, அசேல குணரத்ன, ஓசத பெர்ணான்டோ, சந்துன் வீரகொடி மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோரே இவ்வாறு  எவரெஸ்ட் பிரீமியர் லீக் 2021ல் பங்குக்கொள்ளும் இலங்கை வீரர்கள்.

எவரெஸ்ட் பிரீமியர் லீக் போட்டியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் 2003 -ல் உலகின் முதல் தொழில்முறை இருபது -20 லீக் என்ற பெயரில் தொடங்கியது. பின் டி 20 மும்பை லீக் என்பது மும்பையில் நடைபெறும் தொழில்முறை இருபதுக்கு -20 கிரிக்கெட் லீக் போல நேபாளத்தில் நடைப்பெறும் இப்போட்டியை நேபாளத்தின் சோஹ்ரா விளையாட்டு மேலாண்மை மற்றும் கிரிக்கெட் சங்கம் அதனை எவரெஸ்ட் பிரீமியர் லீக் என்ற பேரில் ஆரம்பித்தது.

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கின் நான்காவது பதிப்பு முதலில் 2019 டிசம்பர் 8 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டது பின்பு 29 பிப்ரவரி முதல் 14 மார்ச் 2020 வரை பிற்போடப்பட்டு 2020 மார்ச் 14 முதல் 28 வரை இயக்க மீண்டும் திட்டமிடப்பட்டது. துரதிஷ்டவசமாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரி மாதத்தில் 2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் 2021 25 செப்டம்பர் - 9 அக்டோபர் என்ற திகதிகளில் நடைப்பெறும் என நேபாள கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் எமது வீரர்கள் எவரெஸ்ட் பிரீமியர் லீக்கின் நான்காவது பதிப்பில் பங்குக்கொள்வது இலங்கைக்குப் பெருமைக்குரிய ஒன்றாகும்.

Last modified on Tuesday, 14 September 2021 08:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd