நாடளாவிய ரீதியில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பல அலுவலகங்கள் நாளை (15) முதல் திறக்கப்பட உள்ளன.
இதன்படி மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்கள் நாளை திறக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அலுவலகங்கள் சாதாரண சேவைகள் மற்றும் அவசர சேவைகளை வழங்க திறந்திருக்கும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.