web log free
January 12, 2025

மதுபோதையில் ஹெலிகாப்டரில் சென்ற மாநில அமைச்சர்

சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே குடிபோதையில் அவரது நண்பர்கள் குழுவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 12ம் திகதியன்று பலாத்காரமான முறையில் வெலிகடை சிறைச்சாலைக்கும் அநுராதபுர சிறைச்சாலைக்கும் அத்துமீறி உள்நுழைந்துள்ளது துப்பாக்கியை காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களை தரம் தாழ்த்தி தண்டிக்க முயன்றுள்ளார்.

ஆதாரங்களின்படி, செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த மாநில அமைச்சர்,ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டரில் அனுராதபுரம் சிறை வளாகத்திற்குள் நுழைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களை அவரின் முன் மண்டியிட கூறி துப்பாக்கி முனையில் மிரட்டினார். இந்த நேரத்திலும் அவர் மது போதையில் இருந்தார் என்று ஆதாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

மாநில அமைச்சரின் நண்பர்களும் குடிபோதையில் இருந்தனர். அவர்களில் பலர், குறுகிய கால்சட்டை (ஷார்ட்ஸ்) அணிந்திருந்தனர். "அவர்கள் மிகவும் குடிபோதையில் இருந்ததால், அவர்களில் சிலர் நேராக நிற்க முடியாமல் தரையில் விழுந்தனர்" என்று அந்த சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த குழுவில் சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தி தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்த அழகிப்போட்டி வெற்றியாளரொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த குழுவில் இருந்த வாகனத்தை அந்த அழகிப் போட்டியின் வெற்றியாளரே ஓட்டினார் எனவும் மாநில அமைச்சர் உட்பட நண்பர் குழு தூக்கு மேடைக்கு செல்ல முயன்றபோது அவள் ஒரு பெண் என்பதால் ஆண் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள செல்களைத் தாண்டி செல்ல வேண்டாம் என்று சிறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று (14), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) பாராளுமன்ற உறுப்பினர் கஜென் பொன்னம்பலம் ஒரு பதிவை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டார்.

ரத்வத்தே அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்ததையும் தமிழ் அரசியல் கைதிகளுள் இருவரை துப்பாக்கி முனையில் அவர் முன் மண்டியிடச் செய்துஇ அவர்களை அந்த இடத்திலேயே கொன்றுவிடுவதாக அச்சுறுத்தினர் எனவும் அவரது கட்சியால் உறுதிப்படுத்த முடியும் என்று பொன்னம்பலம் கூறினார். ரத்வத்தே உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் 'ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் சிறையில் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாகக் கூறி அவரை உடனடியாக விசாரணைக்குப் பிறகு கைது செய்ய வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் லோகனின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்த சஜித், ரத்வத்தவை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். லோகன் ரத்வத்தவின் சமீபத்திய குற்றச்சாட்டுக்கு சாமகி ஜன பலவேகாயா (SJB) தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த நடத்தை "அருவருப்பானது மற்றும் சட்டவிரோதமானது" என்று பிரேமதாசா குறிப்பிட்டார், மேலும் இந்த சம்பவம் நாட்டில் இருக்கும் அராஜக நிலைமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறினார்

 

 

 

 

Last modified on Wednesday, 15 September 2021 11:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd