ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ZOOM தொழில்நுட்பம் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று கூடியது.
இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை புதிய கொள்கைகளுடன் புதிய தோற்றத்தில் உருவாக்குவது தொடர்பில் கவனம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் குறித்து புதிய கொள்கைகளை வகுப்பதுடன் 'வெற்றிலை' அடையாளத்தின் கீழ் ஒரு புதிய முகத்தை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தேசவிமுக்தி ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பி.எம்.போடி அப்புஹாமி ஆகியோரும் சந்திப்பின் தொடக்கத்தில் நினைவுகூரப்பட்டனர்.