அமெரிக்காவிலிருந்து இன்று இலங்கைக்கு 40 மில்லியன் டாலர் நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அமெரிக்காவிலிருந்து இன்று இலங்கைக்கு 40 மில்லியன் டாலர் நிதி வழங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி! சிறிலங்காவின் சிறு வணிகத் துறையின் குறிப்பாக பெண் தொழில்முனைவோரை மேம்படுத்த இந்த நிதிகள் நிர்வகிக்கப்படும். இலங்கையின் ஜனநாயக பாதுகாப்பு மற்றும் செழிப்பான இலங்கைக்கு அமெரிக்காவின் உதவி என்றும் இருக்குமென பதிவிட்டுள்ளார்.