இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எதிர் வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.