web log free
February 01, 2026

லொஹான் ரத்வத்த புஷ்பிக்கா தொடர்பில் தெரிவித்துள்ள விடயம்

நான் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் புஷ்பிக்காவை தனக்கு யாரென்றே தெரியாது என இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த மாதம் 12ஆம் திகதி தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றதாகவும், ஆனால் தான் சிறைச்சாலைக்கு செல்லும் போது பெண் ஒருவரையோ அல்லது நண்பர்களையோ அழைத்துச் செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தூக்குமேடையை பரிசோதிக்கவே தான் சென்றதாக தெரிவித்துள்ள அவர், இதன்போது தான் மதுபோதையில் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd