ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-ஹமத் அல்-சபாவுக்கும் இடையிலான சந்திப்பு மன்ஹாட்டனில் முன்தினம் (19) காலை நடைபெற்றது.
இரு நாடுகளுக்கிடையிலான ஐம்பது ஆண்டுகால நெருக்கமான மற்றும் நட்பு இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்து, இரு தலைவர்களும் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினர்.
அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை சக்தி மற்றும் சுத்திகரிப்பு துறைகளில் குவைத் அரசுக்கு கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் குவைத் பிரதமரின் கவனத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஈர்த்தார்.
இரு தலைவர்களும் உணவு பாதுகாப்பு, கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.