இலங்கை விளையாட்டு சங்கங்கள் வரவிருக்கும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கு கொள்ள முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று இருந்தபோதிலும், எங்கள் தேசிய விளையாட்டு சங்கங்கள் வரவிருக்கும் ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்குபெற பயிற்சி அளிக்க அனைவர் முன்னிலையிலும் கலந்துரையாடி உறுதி எடுக்கப்பட்டுள்ளது! எங்களின் தனிப்பட்ட திறனை சிறந்த முறையில் வெளிகாட்டி வெற்றியடைவதே நம் குறிக்கோள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.