மதுபான விற்பனை நிலையங்களை திறந்தன் மூலம் மக்கள் கள்ளச் சாராயத்தை அருந்தி உயிரிழப்பது தடுக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் வைத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் சாராய போத்தல் ஒன்றின் விலை 3500 முதல் 4000 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டது என்று கூறிய அவர்,
மதுபான விற்பனை நிலையங்களை திறந்ததன் மூலம் மக்கள் கள்ளச் சாராயத்தை அருந்தி உயிரிழப்பது தடுக்கப்பட்டது எனறும் தெரிவித்துள்ளார். மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது என அரசாங்கம் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம்.
அரசுக்கு நிதி கிடைக்கும் பிரதான மூலங்கள் சில உள்ளன. நாடு முடக்கப்பட்டிருந்தாலும் அவை இயங்க வேண்டும் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.