இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவர் எலியந்த வைட் நேற்று ( செப்டம்பர் 22) காலமானார், கொவிட் -19 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்துள்ளார்
கொழும்பைச் சேர்ந்த எலியந்தா வைட் மாற்று மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்தார் என்பதும் அவர் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் இந்திய நடிகர் சல்மான் கான் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், இயன் சேப்பல் மற்றும் லசித் மலிங்கா உட்பட பல குறிப்பிடத்தக்க நபர்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறியுள்ளார்.
அவரின் மறைவிற்கு நம் நாட்டின் பிரதமர் கௌரவ ராஜபக்ஷ அவர்களும் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் நிவாட் கப்ரால் அவர்களும் மேலும் பல தலைவர்களும் துக்கம் தெரிவித்துள்ளனர்.