அநுராதபுரம் திறப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரியாகல பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டு துப்பாக்கி வெடித்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நேற்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 மற்றும் 44 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் மற்றொரு நபருடன் குறித்த பிரதேசத்துக்குச் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.