இன்று மேல்மாகாணத்தில் 12 தொடக்கம் 19 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தின் அனைத்து போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் இன்று முதல் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாட்பட்ட நோயாளிகளின் காரணமாக சிறுவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அதனை தடுக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெகு விரைவில் இத்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.