இலங்கைக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவிருந்த சேதனப் பசளை தொகையில் பக்டீரியா இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெறப்பட்ட மாதிரிகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அந்த பரிசோதனையில் குறித்த சேதனை பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
எனவே, குறித்த சேதனப் பசளை தொகையை நாட்டிற்கு கொண்டுவருவதை தவிர்க்குமாறு தாம் சிபார்சு செய்தவாக அவர் குறிப்பிட்டார்.