பனாமா லீக்ஸ், தி பாரடைஸ் லீக்ஸ்களுக்கு அடுத்தபடியாக தற்போது பண்டோரா ஆவணம் வெளியிடப்பட்டு உலக நாடுகளை உலுக்கி உள்ளது. பல்வேறு நாடுகளில் பணம் பதுக்கிய பிரபலங்களில் பெயர்கள் அடங்கிய பண்டோரா ஆவணம் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் செல்வந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள், சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை Pandora papers அம்பலப்படுத்தியுள்ளது.
இதில் இலங்கை உட்பட 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் மறைக்கப்பட்ட சொத்து விபரங்கள் வெளியாகி உள்ளது.
சமகால மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தற்போது சில பக்கங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இன்னும் பல பக்கங்களை வரும் நாட்களில் தி கார்டியன் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 11.9 மில்லியன் ஆவணங்களை Pandora papers வெளியிட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.