web log free
December 06, 2025

தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு மட்டும் கிடைத்த வாய்ப்பு

உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் நாளை 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.


400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமந்துகொண்டு வருகின்றது.
நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக வந்து கொழும்பு துறைமுகத்தை அடையும்.


உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும். அதில் தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd