இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை திருடிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 30 வயதான அவர் எப்பாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 29 லட்சம் ரூபா பணத்தை பொலிஸார் மீட்டனர். அத்துடன் 24 லட்சம் ரூபா பெறுமதியான லொறியையும், 9 லட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும் 1லட்சத்து 70ஆயிரம் பெருமதிமிக்க கையடக்க தொலைபேசி ஒன்றையும் மற்றும் சில பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.