அச்சுவேலி நகரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் என்ற 46 வயது நபரே சடலமாக மீட்க்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.