web log free
February 01, 2026

பண்டோரா ஆவணங்களைப் பற்றி ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.


இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd