பெண்டோரா ஆவணங்கள் மூலம் பணத்தை மறைத்து வைத்துள்ள மேலும் பலரின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிடைக்கும் தகவல்களுக்கு அமைய சுமார் 65 இலங்கையர்களின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிட்ட காலவரையறை குறிப்பிடப்படவில்லை.
இதனால், எந்த காலத்தில் இந்த பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டது என்பதை கூற முடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.