பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி வழங்கப்படும் இடம் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப ரீதியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடுப்பூசி வழங்கப்படும் திகதி, இடம் மற்றும் மேற்கொள்ளப்படும் முறை குறித்தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை ஒன்றும், வழிகாட்டல் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்படும்.
அவை வெளியிடும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். போலி செய்திகளில் ஏமாந்து, பூஸ்டர் தடுப்பூசியைப் பெற வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
அத்துடன், சுகாதார அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி வழங்கப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.