web log free
May 09, 2025

சம்பத் தயானந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

2009 ஆம் ஆண்டு கொழும்பில் வௌ்ளைவேனில் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில், கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்தவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை – வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசித்த வடிவேல் லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமாநந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வேனை, 72 துண்டுகளாக வெட்டி, வெலிசர கடற்படை முகாமில் மறைத்துவைத்திருந்தபோது அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd