web log free
February 01, 2026

சங்கானையில் வாய்காலில் இருந்து சிறுவனொருவரின் சடலம் மீட்பு

சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

நேற்று மதியத்தில் இருந்து சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து அப்பிரதேசத்தில் மக்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் குறித்த வாய்க்காலில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Last modified on Sunday, 10 October 2021 05:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd