விவசாயிகள் உரப் பிரச்சினை குறித்து எந்த அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை. உரப் பிரச்சனையை தீர்க்கும் விசேட திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் படி, மனைப் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தி குடும்ப அலகுகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ், குருணாகலில் இடம்பெற்ற, நீரியல் வள தொழில்முயற்சி திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் பேசிய அவர்,
“விவசாயிகளுக்கு பயிற்செய்கையின் போது நஷ்டம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும்.
எதிர்க்கட்சியினர் நாட்டில் மாறுபட்ட கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். எனவே, நாடு குறித்து சிந்தித்து சரியான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
எங்கள் விவசாயிகளுடன் இணைந்து இந்தப் பிரச்சினையை நிச்சயம் வெற்றி கொள்வோம்” என்றார்.