5 வருடங்களில், இலங்கையின் பொருளாதார இலக்கை பூர்த்தி செய்யக் கூடிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பதற்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் நிதி தொடர்பில் ஒழுக்க நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன், அபிவிருத்தி இலக்கை எட்ட வேண்டுமாயின் புதிய துறைகளை அடையாளம் காண்பதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.